இரவை சுடும் வெளிச்சம் - 12

  • 417
  • 153

ஸ்வாதி ஒன்றும் சொல்லாமல் அவன் பின்னே போய்விட்டாள். ஹாஸ்பிடலில் இருந்து வந்த பிறகு போன் செய்தாள். அவன் அப்படித்தான் சாரி ரஞ்சித்.. பரவாயில்ல நீ எப்படி இருக்கே.. நான் ஓகே தான். அப்பப்போ முரட்டுத்தனமா நடந்துக்குவான் விக்கி .உன் கூட பழகுறது அவனுக்கு பிடிக்கல. சரி ஸ்வாதி ரெஸ்ட் எடுத்துக்கோ நாளைக்கு ஆபீஸ் ல பாப்போம். anyway தேங்க்ஸ் என்றாள். தீப்தி போன் செய்திருந்தாள். என்னாச்சு ரஞ்சித் ஏன் போனை எடுக்க மாட்டேங்குறீங்க ஏதாவது பிரச்னையா ? நான் வேணா வரட்டுமா என்றாள். அதெல்லாம் ஒண்ணுமில்ல இங்க ஸ்வாதிக்கு உடம்பு சரியில்ல ஓ என்னாச்சு அவங்களுக்கு. சின்ன accident அவ்ளோதான். சரி சரி சாப்டீங்களா இல்ல இனிமேதான். நெஸ்ட் வீக் வரலாம்னு பாக்குறேன் . அதெல்லாம் வேண்டாம் தீப்தி நானே business விஷயமா வெளில போக போறேன் . நீ வந்தா தனியாத்தான் இருக்கணும் . ம்ம் புரியுது.. கோவப்படாதே தீப்தி