இரவை சுடும் வெளிச்சம் - 11

  • 513
  • 207

ரஞ்சித்துக்கும், தீப்திக்கும் திருமணம் சிறப்பாக நடந்தது . ராம் தீபுவுடன் வந்து வாழ்த்தினான். தீப்தி மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தாள். பல போராட்டங்களுக்கு பிறகு ரஞ்சித் ஆவலுடன் கை கோர்த்து நடந்தான். ஹனிமூன் ட்ரிப்புக்கு பிளான் பண்ணினார்கள். குழந்தை இப்போது வேண்டாம் என்று ரஞ்சித் சொன்னான்.. தீப்திக்கு மனசே கேட்கவில்லை. இருந்த போதும் கொஞ்ச நாள் எதிர்கால திட்டங்களுக்கு பிளான் பண்ணி விட்டு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்றான் ரஞ்சித். எப்போதும் போல அவளை குழந்தை உள்ளத்துடன் நேசித்தான் . அப்போதுதான் அந்த நியூஸ் வந்தது . அவனுக்கு ப்ரோமோஷன் வந்திருந்தது 3 மாசம் ஹைதெராபாத்தில் வேலை. தீப்தி பிடிவாதமாக வேண்டாமென்றாள். இல்ல தீப்தி நான் இப்போதான் டெவெலப் ஆகிட்டு வரேன். இப்போ போய் இந்த opportunity வேணாம்னு சொன்னா career ஸ்பாயில் ஆகிடும். மூணு மாசம்தான் போய்ட்டு வரேன் . நானும் வரேன்.. நான் என்ன இங்க இருக்கிற ஹைதெராபாத் தானே போறேன்