ப்ரீத்தியை யார் கொன்றிருப்பார்கள் ? ஒரு வேலை சுந்தரே இதை செய்திருப்பானோ என்ற சந்தேகம் எழுந்தது . சுந்தர் கிடைத்தால்தான் உண்மை தெரியும். போலீசார் சுந்தரை தேடி வந்தனர். சுரேஷுக்கு போன் பண்ணிய குமரேசன் மொபைல் நம்பர் லொகேஷன் பெங்களூருவை காட்டுவதாகவும் அங்கு போலீஸ் விரைந்திருப்பதாகவும் தகவல் சொன்னார்கள் . இதற்கிடையே அப்போது பாஸ் துரை அலுவலகத்தில் வேலை செய்து வந்த சில நபர்களிடம் ப்ரீத்தி பற்றி விசாரித்தான். ப்ரீத்தி ரொம்ப நல்ல பொண்ணு சார் அதனால ஆபீஸ்ல ஒரு பிரச்னையும் இல்ல . எதனால வேலைய வீட்டுக்கு நின்னாங்க தெரியுமா ? காரணம் எதுவும் தெரியல .பாஸ் தான் அவங்க கல்யாணத்தை பண்ணி வெச்சாரு .மறுபடி வேலைக்கும் வர சொன்னாரு. சுந்தர்தான் அந்த பொண்ண வேலைக்கு போக வேண்டாம்னு தடுத்துட்டான். தீப்தி இடையிடையில் என்ன நடக்கிறது என ராமிடம் கேட்டு வந்தாள். சுரேஷ் குமரேசன் உங்களை மெரட்டும்போது பணம் கேக்கலையே