யுவனுக்கு தான் நிச்சயம் தன்னால் முடிந்ததை செய்து தருகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினான் ராம். சாமியார் நரசிம்மன் லேசுப்பட்ட ஆளுமில்லை. யுவனுக்காக இதை செய்துதான் ஆக வேண்டுமென ராம் நினைத்தான். தீப்தியிடமும் , ரஞ்சித்திடமும் நடந்ததை சொன்ன பொது அவர்களும் வருத்தப்பட்டார்கள் . ராம் சாமியாரை சந்திப்பதென முடிவெடுத்தான். மாந்த்ரீகம், மந்திரம் இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது ராமுக்கு தெளிவில்லாமல் இருந்தது .தீபுவிடம் பேசும்போது நாமளே ஒரு பூஜைக்கு ஏற்பாடு பண்ணி கையும் ,களவுமா பிடிச்சா என்ன என்றாள் . அது அவ்வளவு சுலபமில்லை . வேற ஒரு தம்பதிகள் மூலம்தான் அது நடக்கணும் நம்ம ரஞ்சித். தீப்தியவே நடிக்க வெச்சா என்ன . அது சரியாய் வருமா ? தீப்தி நிச்சயமா ஒத்துப்பாங்க . சாமியார் மோசமான ஆளா இருக்கறதுனால கொஞ்சம் தயக்கமா இருக்கு . தீப்தியவே கேட்டு பார்ப்போம் . நான் தீப்தியோட அண்ணனாகவும், நீ ரஞ்சித்தோட