ஜாபர் அப்படி எந்த பொருளை வைத்திருந்தான் என தெரியவில்லை. ரஞ்சித் சென்னைக்கு பயணமானான் . எப்போதும் போல வேலைக்கு போனான். இது போல unknown நம்பரில் இருந்து கால் வந்தது என்ற போது இது ஒரு ஸ்கேம் என்றார்கள் கூட வேலை பார்ப்பவர்கள் . தீப்தியை சந்தித்தான் . ஜாபர் சம்பந்தமா உனக்கு ஏதாவது மறுபடி கால் வந்துச்சா என்றான் . இல்லே அன்னிக்கி வந்தது தான். நாம டிடெக்ட்டிவ் யாரையாச்சும் பாக்கலாமா என்றாள்?. கொஞ்சம் பொறு தீப்தி அந்த பொருள் என்னனு கண்டுபிடிக்கணும் அதுக்கு அப்புறமா நாம டிடெக்ட்டிவ் பார்க்கலாம் . கார்த்திக் என்ன சொல்றான். அந்த துப்பாக்கி சம்பவத்துக்கு அப்புறம் ஆளே மாறிட்டான் . என்னை கண்டாலே விலகி போறான் . என்னனு தெரியல . ஒரு வேளை அவனை குறி வெச்சவங்க உனக்கும் வைக்கலாம்னு நினைக்கிறானோ என்னவோ ? சரி ரஞ்சித் நான் வரேன்.ஏன் இவ்ளோ அவசரம்