ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 50

  • 2.1k
  • 787

விஷால் தன்னுடைய அலுவலக பணிகளை நிதானமாக முடித்து வைத்தான். அடுத்த வாரம் ஃபேமிலி டூர் போக போகிறோம் அதனால் பிசினஸ் மீட்டிங் எல்லவற்றையும் அட்ஜஸ்ட் செய்யுங்கள் என உத்தரவிட்டான். அதன்படியே அனைத்தையும் முடித்தான். அனன்யாவும் தன்னுடைய அலுவலக வேலைகளை முடித்தாள். அவர்கள் பாண்டிச்சேரி மற்றும் வேளாங்கண்ணி போவதாக முடிவெடுத்து இருந்தார்கள். விஷால் டிராவல் செய்வதற்கு தேவையான உடைகள், மேக்அப் சாமான்கள் எல்லாவற்றையும் அனைவரையும் அழைத்து போய் ஷாப்பிங் செய்து வாங்கி கொடுத்தான்.விஷால் முன்பு அவன் போயிருந்த அதே ரிசார்ட் புக் செய்திருந்தான். குழந்தைகளுக்கு ஒரு அறை பெரியவர்களுக்கு ஒரு அறை என புக் செய்தான். தீபா நானே கார் ஒட்டுகிறேன் என்றாள். இந்த முறை குழந்தைகளோடு போகிறோம் என்பதால் விஷால் உற்சாகம் மிகுந்தவனாக இருந்தான். அனன்யா , சுபா, தீபா மூவரும் தயாராகி விட்டானர். குழந்தைகள் இன்னும் ரெடி ஆகி கொண்டு இருந்தனர். விஷால் முன்பக்க இருக்கையில் அமர்ந்து கொண்டான். அனன்யா