ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 44

  • 624
  • 237

குடும்பத்தாருடன் சொந்த ஊரில் தீபாவளி கொண்டாடிவிட்டு பெங்களூர் திரும்பினான் விஷால். முன்னதாக சுபாவும் தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லியிருந்தாள்.அனன்யா ஒரு மியூசிக் ஆல்பம் பண்ண விரும்புவதாக சொன்னாள். விஷால் அவளை அதற்காக பாராட்டி உற்சாக படுத்தினான்.மியூசிக் ப்ரொடியூசர் சில பேரை பார்த்து விட்டு வந்தாள். எனக்கென்னவோ இது ஒண்ணும் சரியா வராதுன்னு தோணுது விஷால். ஏன் என்ன ஆச்சு அனன்யா. நிறைய செலவு ஆகும் போல அதோட சில பேர் தப்பான நோக்கத்தோட பேசுறாங்க . ஓ சாரி அனன்யா. பணத்தை பத்தி நீ கவலைபடாதே எப்படியாவது ரெடி பண்ணலாம் .நானும் எனக்கு தெரிஞ்சவாங்க கிட்ட சொல்லி வைக்கிறேன். நீ நல்ல ப்ரொடியூசர மட்டும் கண்டுபிடி அனன்யா மத்தது எல்லாம் நான் பார்த்துக்கிறேன் என்றான். தாங்க்ஸ் விஷால். சுபாவிடமும் இதை பற்றி சொன்னான். ரொம்ப நல்ல விஷயம் நானும் இங்கே ட்ரை பண்ணுறேன் என்றாள். தீபா சாட்விக் உடன் விளையாடி கொண்டு கொண்டிருந்தாள்.