ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 42

  • 1k
  • 471

அனன்யாவின் பிரசவ தேதி நெருங்கி கொண்டிருந்தது.விஷால் சற்று பதட்டத்துடனே இருந்தான். தீபா அம்மா அவனுக்கு தைரியம் சொன்னாள் . அனன்யா எனக்கும் பையனுக்கும் ஒண்ணும் ஆகாது விஷால் என்று சொன்னாள். சுபா குழந்தையை எப்போது பார்ப்போம் என ஆவலுடன் காத்து கொண்டிருந்தாள். டாக்டர் தேதி சொல்லி விட்டார். எல்லாவித மருத்துவமனை எமர்ஜென்ஸி நம்பர்களையும் செக் செய்து பார்த்து கொண்டான். விஷாலுடைய அப்பாவும், அம்மாவும் வந்திருந்தார்கள்.சரியான நேரத்தில் அனன்யாவை ஹாஸ்பிடலில் சேர்த்தான். சுபாவும் விஷால் அம்மாவும் விஷாலுக்கு தைரியம் சொன்னார்கள். அனன்யாவுக்கு நார்மல் டெலிவெரி ஆனது. அழகான ஆண் குழந்தை பிறந்தது. விஷால் சந்தோஷத்தின் உச்சிக்கே போனான். தீபாவுக்கு குழந்தை பிறந்த விஷயத்தை சொல்லி அனுப்பினான். குழந்தையுடன் வந்து பார்ப்பதாகவும் சொல்லி இருந்தான். அனன்யா இவனை பார்த்ததும் என்ன விஷால் பயந்து விட்டாயா என்றாள்.நம்ம குழந்தையை பாரு உன்னை மாதிரியே அழுகிறான் என்றாள். அவளை கண்ணீருடன் அணைத்து கொண்டான். அனன்யா நெற்றியில் முத்தமிட்டான்.அனன்யாவை