ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 36

  • 1.2k
  • 512

விஷாலும் சுபாவும் பெங்களூர் போக தயார் ஆயினர். வீடு ரெடி ஆகி விட்டது. பேலன்ஸ் பணத்துக்கு கொஞ்சம் சிரமப்பட்டான். சுபா அப்பா கொஞ்சம் பணம் கொடுத்து உதவி செய்தார். சீக்கிரமே வந்து பெங்களூர் வீட்டை பார்க்க வருவதாய் சொல்லி இருந்தார்.தீபா சென்னை வந்து வீட்டு சாமான்களை பேக் செய்ய உதவினாள். இரண்டு நாட்களில் வீட்டை காலி செய்து விட்டு காரில் பெங்களூர் போனார்கள். அவர்களுடைய புது வீடு எல்லோருக்கும் பிடித்திருந்தது . ஆனால் மொழி தெரியாத ஊர் என்பதும் ஒரு குறையாக இருந்தது. அனன்யா வீடு சூப்பர் என்றாள். அவள் சுபாவிடம் எதை எங்கே வைக்க வேண்டும் என சொல்லிகொண்டிருந்தாள்.பால் காய்ச்சி குடித்தார்கள். அதிகம் இல்லாவிட்டாலும் அக்கம்பக்கத்தினர் 4 பேர் வந்திருந்தனர். விஷால் பொறுப்புணர்வுடன் எல்லாவற்றையும் கவனித்தான். அடுத்த வாரமே சுபா அப்பா, அம்மா வந்திருந்தனர். வீடு நல்லா இருக்கு என்றனர். சீக்கிரம் ஒரு பேர புள்ளைய குடுங்க என்றனர். சுபா