ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 34

  • 1.4k
  • 585

விஷால் புதிய கார் ஒன்றை வாங்கியிருந்தான். அனன்யா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள் . தீபாவும்,சுபாவும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அவர்களுடைய உலகம் இன்னும் விரிவடைந்தது . அனன்யா ஆஸ்ட்ரேலியா போக இன்னும் 2 வாரங்களே இருந்ததால் தீபாவையும், சுபாவையும் சென்னை வர சொல்லி இருந்தான். அவர்கள் இரண்டு நாட்களில் வருவதாக சொல்லி இருந்தார்கள். புதிய கார் எடுத்துகொண்டு குலதெய்வம் கோவிலுக்கு சென்று வந்தார்கள்.தீபாவும் , சுபாவும் சொன்ன மாதிரி சென்னை வந்து விட்டார்கள். விஷால் பயணத்திற்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்தான். நால்வரும் ஷாப்பிங் போனார்கள். அனன்யா நீ இல்லாம நான் எப்படி இருப்பேன் விஷால் என புலம்பி கொண்டே இருந்தாள். சுபாவும், தீபாவும் அவளுக்கு தைரியம் சொன்னார்கள்.இரண்டு வருடங்கள் எப்படி அவளை விட்டு பிரிந்து இருக்க போகிறோமோ என்று உள்ளுக்குள் கவலையோடு இருந்தாலும் அனன்யாவின் எதிர்காலம் கருதி இந்த பிரிவை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். அனன்யாவுக்கு மெல்போர்ன் யூனிவர்சிட்டியில் இடம்