ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 32

  • 978
  • 348

விஷால் பெங்களூர் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களுக்கு அழைத்து போனான். பூங்காக்களில் புகைப்படம் எடுத்து கொண்டார்கள். பிறகு மைசூர் அழைத்து போனான். இயற்கை அழகு நிறைந்த பகுதிகளில் மெய் மறந்து போனார்கள்.ஊர் திரும்பும் நாள் வந்ததும் தீபா நான் போகலை ஊருக்கு என்றாள். சுபாவும், அனன்யாவும் அவளை கஷ்டப்பட்டு சமாதானபடுத்தி அனுப்பி வைத்தனர். சுபா தீபா பாவம் தானே எவ்வளவு நாள்தான் விஷாலை பிரிந்து இருப்பாள் என்றாள் .விஷால் ஒன்றும் சொல்ல முடியாமல் தவித்தான். விஷால் நாம மூணு பேருமே ஆஸ்ட்ரேலியா போனா என்ன ? என்றாள் அனன்யா. அது கஷ்டம் அனன்யா. உனக்கு scholorship எளிதில் கிடைத்து விடும் . சுபாவுக்கு கூட ட்ரை பண்ணினா கிடைத்துவிடும் ஆனா எனக்கு கிடைக்காது என்றான். எனக்கு இன்டர்வியூ கால்ஸ் எல்லாம் வருது அதை முதல்லே அட்டென்ட் பண்ணுகிறேன் என்றாள் அனன்யா. சுபாவும் டான்ஸ் ஸ்கூல் தொடங்க முயற்சிகள் செய்து கொண்டுதான் இருந்தாள்.