ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 16

  • 1.5k
  • 696

விஷாலால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை . இப்போது அவள் இருக்கும் நிலையில் அவளை விட்டு செல்லவும் மனமில்லாமல் தவித்தான் . நீ ஏன் தீபா இப்படி பண்ணுண ? அவள் பதிலேதும் சொல்லாமல் சிரித்தாள் .அவளை படுக்கையில் படுக்க வைத்தான்.அவனுடைய கையின் பிடியை அவள் விடுவதாய் இல்லை. நான் அழகா இல்லையா விஷால்? யார் அப்படி சொன்னது .. ம் எனக்கு தெரியும் விஷால் .. நான் இந்த தனிமையிலே இருந்து இருந்து சாக போகிறேன் என்றாள். அவள் வாயை மெதுவாக மூடினான். ஏன் இப்படி எல்லாம் பேசுற. எல்லாரும் இருக்கோம் உனக்கு .அவள் அம்மா வந்து விட்டாள். காப்பி போட்டு குடுத்தாள் .சுபாவுக்கு ஃபோன் பண்ணி நடந்ததை சொன்னான். நான் வரேன் இப்போ என்றாள். நீ ஏதும் கடுமையா பேசிடாதே என்றான் விஷால். இல்லை பேசலை . சுபா பழங்கள் வாங்கி வந்திருந்தாள் . வா சுபா