ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 13

  • 1.6k
  • 642

விஷாலுக்கு புது லேப்டாப் வந்துவிட்டது . சுபா அதை எடுத்துக்கொண்டு ஆவலுடன் விஷால் வீட்டுக்கு சென்றாள். அனன்யாவுக்கும் ஃபோன் பண்ணி வர சொல்லி இருந்தாள். எப்படி இருக்கு விஷால். நல்லா இருக்கு தாங்க்ஸ் சுபா. அனன்யா வந்து பார்த்தாள். சூப்பர் என்றாள். ட்ரீட் குடு விஷால் என்றனர் இருவருமே . கண்டிப்பாக என்றான் விஷால்.அன்று இரவு மூவரும் ஹோட்டல் ஒன்றிற்கு சென்றனர்.என்ன வேணுமோ வாங்கிக்குங்க என்றான் விஷால். நான் டயட் ல இருக்கேன் என்றாள் சுபா , நானும் தான் என்றாள் அனன்யா.சாப்பிட்டு முடித்ததும்,வீட்டுக்கு கொண்டு போய் விட்டான் இருவரையும். அனன்யா ஃபோன் பண்ணினாள். என்ன விஷால் தூங்கி விட்டாயா .. இல்லை சொல்லு அனன்யா. அப்பாகிட்ட சொல்லவா வேண்டாமா .. வேண்டாம் அனன்யா . இப்போதான் நாம மூணு பேரும் சந்தோஷமா இருக்கோம். அதை கெடுத்துக்க வேணாம். சரி விஷால் good நைட். அனன்யாவுக்கு ஒரு சாரி எடுத்துக்கொடுக்க வேண்டும்