ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 11

  • 1.8k
  • 912

மணி 12 தொட்டதும் எங்கும் பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டது . ஹாப்பி நியூ இயர் விஷால் என அனன்யாவும் சுபாவும் சொன்னார்கள் . தொடர்ந்து ஃபோன் கால் வர தொடங்கியது . எல்லோருடைய வாழ்த்துகளுக்கும் நன்றி சொன்னார்கள் . சுபா பிளேயர் இல் பாட்டை போட்டு விட்டு ஆட தொடங்கினாள் . விஷாலும் அவள் கூட கொஞ்ச நேரம் ஆடினான். பிறகு கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றார்கள். ஸ்வீட் கொடுத்தாள் அனன்யா.இரவு முழுவதும் கொண்டாடினார்கள் . விடிகாலையில் அனன்யாவும், சுபாவும் தூங்க போனார்கள்.விஷால் மாடியிலேயே படுத்து கொண்டான். வீட்டுக்கு போய் குளித்து முடித்து உடை மாற்றினான். மூவரும் கோவிலுக்கு போனார்கள். காலை டிபன் சுபா வீட்டில் .ரொம்ப நல்லா இருந்தது கேக் என்றான் விஷால்.விஷாலுக்கு இன்னும் தூக்கம் கலையவில்லை. நான் ஒரு அரை மணி நேரம் தூங்குகிறேன் என்னை அப்புறமா எழுப்பி விடுங்க என்றான். அங்கிருந்த சோபாவில் படுத்து உறங்கினான்.