ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 5

  • 2.2k
  • 1.1k

ஒரு கணம் அவனால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே முடியவில்லை. சுபாவும் தன்னை விரும்புகிறாள் என்பதை உணரவே சற்று நேரம் பிடித்தது. அவளுடைய அணைப்பில் இருந்து மென்மையாக விடுவித்துக் கொண்டான். என்னாச்சு சுபா உனக்கு என்றான் விஷால். நான் நிஜமாகத்தான் சொல்கிறேன் நான் உன்னை விரும்புகிறேன் என்றாள் சுபா. அனன்யா என்ன சொல்வாளோ என யோசித்துக் கொண்டிருக்கும் போது அவள் சிரித்துக் கொண்டிருந்தாள். என்ன அனன்யா சிரிக்கிற என்றான் விஷால். எதுக்கு நீ பயப்படுற விஷால் என்னிடம் அவ முன்னாடியே சொல்லிட்டா என்னால அதை மறுக்க முடியல எங்க ரெண்டு பேரையும் நீ ஏத்துக்க தான் வேணும். என்ன அனன்யா சொல்ற இது யாராவது கேள்விப்பட்டால் உங்கள தான் தப்பா நினைப்பாங்க .நினைச்சுட்டு போகட்டும்.சுபா நீ மறுபடி யோசிச்சிட்டு சொல்லு. நானும் அனன்யாவும் நல்லா யோசிச்சுட்டு தான் இந்த முடிவு எடுத்திருக்கிறோம் நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நான் உன் கூடத்தான் இருப்பேன்