ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 4

  • 1.9k
  • 951

விஷால் மறுபடி கண் விழித்து பார்த்த போது அவனுடைய வீட்டில் இருந்தான். சுபா கவலையோடு அவன் அருகில் இருந்தாள் . அனன்யா எங்கே என்று கேட்டான் . மருந்து வாங்க போயிருக்கா இப்போ வந்து விடுவாள் யார் உன்னை இப்படி பன்னாங்க ? டான்ஸ் class பசங்களா ? ஆமாம் ..பிரதீப் அவங்க கூட இருந்தானா ? விஷால் அமைதியாய் இருந்தான். டாக்டர் ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்தா சரியாய் போய்விடும் என்று சொல்லி இருக்கிறார். சரி சுபா . அனன்யா வந்து விட்டாள் . பிரதீப் தான் இவனை இப்படி பண்ணி இருக்கான் என்றாள் சுபா .அனன்யா விஷால் அருகில் அமர்ந்தாள். சுபா வெளியே போய் விட்டாள் . அனன்யா என்ன நடந்தாலும் நான் உன்னை விட்டு போக மாட்டேன் என்றாள் .மென்மையாக அவன் நெற்றியில் முத்தமிட்டாள் . தாங்க்ஸ் அனன்யா என்றான். பிரச்சனைகளை பெரிது படுத்த வேண்டாமென நினைத்தான்