ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 1

  • 11k
  • 4.5k

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது பகுதி 1 அனன்யாவை பார்த்ததும் பதட்டத்தில் விஷாலுக்கு வேர்த்து கொட்டியது. இன்று அவளுடைய பிறந்தநாள். அவள் இவனை நோக்கி வரும்போது கை கால்கள் உதற தொடங்கின. இது முதல் முறை அல்ல என்னவோ அவளை பார்க்கும் போதெல்லாம் இவனுக்கு தலை முதல் கால் வரை ஜுரம் வந்தது போல இருந்தது அவளை பார்த்த நாள் முதலாய் மிகுந்த இருந்த ஆர்வத்துடன் அவளிடம் பேச முயற்சிப்பான். ஆனால் அவள் பேசத் தொடங்கியதும் இவனுடைய குரல் ஒரு கட்டத்துக்கு மேல் எழும்பாது தன் காதலை சொல்ல விஷாலுக்கு ஒரு தடையும் இல்லை அவனே தான் தடையாக இருந்தான் அவனுடைய தாழ்வு மனப்பான்மை அவனை அவளிடம் பேச முடியாமல் செய்தது இன்றைக்கு அவள் சாக்லேட் கொடுக்கும் பொழுது இவன் அவளுடைய கண்களை பார்க்க முடியாமல் தவித்தான். இவனுடைய விருப்பமெல்லாம் அவள் கூட சகஜமாக பழக வேண்டும் என்பதுதான் ஆனால்