இரவுக்கு ஆயிரம் கைகள் - 35

  • 1.7k
  • 666

ராம் எப்போதும் போல இல்லாமல் சற்றே சோர்வாக காணப்பட்டான்.இதை பார்த்த தீபு என சார் டல்லா இருக்கீங்க. நான் , தீபக்,லதா எல்லாம் ஆர்ட் கேலரி போறோம் வரீங்களா என்றாள். நீங்க போய்ட்டு வாங்க பெயிண்டர் சுகேஷ் பெயிண்டிங்ஸ் எல்லாம் அவ்ளோ நல்லா இருக்கும் . சும்மா வாங்க சார். அரை மனதாக சரி வரேன் என்றான் ராம். என்ன தீபக் நீயும் இவங்க கூட சேர்ந்துட்ட போல என கிண்டல் செய்தான். நாம எப்பவுமே டூட்டில தான் இருக்கோம் ஒரு சேஞ்சுக்கு ?சரி சரி போவோமோ . பெயிண்டிங்கில் எத்தனை வகை உண்டோ தெரியாது அதன் வண்ணங்கள் சொல்லும் செய்தி அற்புதமானது என்றார் சுகேஷ். தீபு எல்லோரையும் சுகேஷுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். ரொம்ப சந்தோசம் வந்ததுக்கு என்றார் சுகேஷ்.இவங்க என் wife லட்சுமி என அறிமுகப்படுத்தினார். இவங்க தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் தான் என்றார். சூப்பர் சார் என்று பாராட்டினான் ராம்.