இரவுக்கு ஆயிரம் கைகள் - 34

  • 1.5k
  • 588

தீப்தி ஜெகநாதனை சந்திக்க விரும்புவதாக சொன்னாள்.கொஞ்ச நாள் பொறு தீப்தி . நாம இப்போதான் குருஜிக்கிட்டே இதை பத்தி பேசி இருக்கோம் என்றான் ராம் . அப்போ என்னை திரும்ப ஆசிரமத்துக்கு அனுப்பிடுவீங்களா ராம் ? அப்படியெல்லாம் இல்லை . உன் விருப்பமென்ன தீப்தி. நான் அப்பா கூடவே போறேன் . சரி கண்டிப்பா இதை நிறைவேத்துவேன். குருஜி கேட்டா என்ன சொல்லுறது . அதை நான் பாத்துக்குறேன் . நீ ரெஸ்ட் எடுக்கணும்னு டாக்டர் சொல்லி இருக்காரு . ஓகே ராம். ராம் ஆசிரமத்துக்கு போனான் . குருஜியிடம் பேச வேண்டும் என சொன்னான் . இப்போ யோக நிலைல இருக்கறதுனால இன்னைக்கி யார்கூடவும் பேசமாட்டார் . நீங்க போய்ட்டு நாளைக்கு வாங்க என்றார் தலைமை சீடர் .ராம் ஏமாற்றத்துடன் திரும்பினான் . மறுநாள் குருஜி அவனை நேரில் வந்து சந்திக்கும்படி அழைத்தார் . ஜெகநாதன் கேஸ் வாபஸ் வாங்கிட்டான்.