இரவுக்கு ஆயிரம் கைகள் - 33

  • 1.8k
  • 687

எது நிலைத்திருக்க போவதில்லையோ அதுவே உன் ஆசை . எது உன்னை நிர்கதியாய் நிறுத்தப்போகிறதோ அதுவே உன் ஆசை . ஆசையை துறந்திட எல்லா உயிர்களையும் சமமாய் நடத்து. குருஜி கண்களை மூடி கொண்டார். இன்னிக்கி பிரசங்கம் முடிஞ்சது எல்லாம் போங்க. அமைதியா போங்க என்றார் தலைமை சீடர். ராம், தீபு, தீபக் , லதா எல்லோரும் தியானத்துக்கு வந்திருந்தார்கள் . எல்லாவற்றிலும் இருந்து விடுபட தியானமே சிறந்ததென்று யாரோ சொல்லி இருந்தார்கள் . ஸ்வாமி.. சே சார் என்ன இது வேஷம் உங்களுக்குத்தான் இதுலெல்லாம் நம்பிக்கை இல்லையே . நம்பிக்கை இல்லைதான்.. ஆனா ஏதோ ஒன்னை நோக்கி மக்கள் போறாங்கன்னா அந்த நம்பிக்கையை நாமளும் மதிக்க வேண்டி இருக்கு . இப்போ என்ன சொல்ல வரீங்க? இந்த குருஜி மேல complaint வந்துருக்கு . அதானே பார்த்தேன் . அது உண்மையா பொய்யான்னு கண்டுபிடிக்கணும் . அதுக்கு தியானம்தான் ஒரே