இரவுக்கு ஆயிரம் கைகள் - 26

  • 2.9k
  • 937

அது ஒரு பழைய கேஸ் என்பதால் காசிநாதன் பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை . போலீஸ் காசியை மிரட்டி விட்டு விட்டார்கள் என்று சொன்னார் தீபிகா அம்மா. நந்தா ஊரிலிருந்து வந்தவுடன் ராமை தொடர்பு கொண்டான். ஆனந்த் agency என்ன ஆச்சு ? அது எங்க சித்தப்பா காசியோடது தான். ஆனா அவருக்கும் இந்த விஷயத்துக்கும் சம்பந்தம் இல்லை . ஆனா அடுத்தவனை கொலை பண்ற அளவுக்கு அவருக்கு துணிச்சல் கிடையாது. அந்த பிரச்னைக்கப்புறம் காசி சித்தப்பா அந்த தொழிலையே விட்டுட்டார். இப்போ எங்கே அவர் . அவர் செத்து மூணு மாசம் ஆச்சு . குடி பழக்கத்துக்கு அடிமை ஆகிட்டார். சரி நந்தா இந்த வீடியோ விஷயம் வேற யாருக்காவது தெரியுமா. நல்லா யோசிச்சு சொல்லு லிப்ட் ஆபரேட்டர் மணிக்கு தெரியும் .அவர் பொண்ணு கல்யாணத்துக்கு தீபிகா அக்கா பணம் கொடுத்து ஹெல்ப் பண்ணாங்க .அவரும் அமரனும் நல்ல காண்டாக்ட் ல