இரவுக்கு ஆயிரம் கைகள் - 25

  • 2.6k
  • 876

பிரவீன் இறந்து விட்டான். இந்த செய்தியை தீபிகா உணரக்கூட இல்லை. nurse ருக்மணி இந்த செய்தியை தீபிகா கேட்கும்படி சொல்லி பார்த்தாள்.அப்போதும் அவளிடத்தில் எந்த ஒரு சிறு அசைவும் இல்லை . பரந்தாமன் போலீஸ்காரர்களையும் மீடியாவையும் சமாளிப்பதில் ஈடுபட்டார். அமரன் வந்திருந்தான் . ஒரு மாத விடுப்புக்குள் பிரச்னை எல்லாம் தீர்ந்துவிடும் என நம்புவதாக பரந்தாமனிடம் சொன்னான். போஸ்ட்மோர்டெம் ரிப்போர்ட் தெளிவாக சொன்னது பிரவீன் தவறி விழவில்லை யாரோ பலவந்தமாக தள்ளியிருக்கிறார்கள். நரேஷ், தீபன், கார்த்திக் மூவரும் அடுத்து என்ன செய்வதென தெரியாமல் விழித்தனர். யார் இந்த கொலையை செய்திருப்பார்கள் என யோசிக்க தொடங்கினார்கள். போலீஸ் இவர்களையும் விசாரித்தது . பிரவீன் விழுந்திருந்தது ஆளில்லாத புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் . அமரனும் தன் பங்குக்கு விசாரணை செய்ய தொடங்கினான் . வீடியோ விவகாரம் அவனுக்கு தெரிய வந்தது .ப்ரவீனுடைய உடைமைகளை நிதானமாக ஆராய்ந்தான் . அதில் என்ன தேடுகிறோம் என்ற