நினைக்காத நேரமேது - 50

  • 5.5k
  • 1
  • 2.2k

நினைவு-50 அரசு மருத்துவமனையில் சற்றும் தாமதிக்காமல் அனுமதிக்கப்பட்டான் ராகவன். இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவனின் மூச்சுத்திணறல் சீராகப்பட்டது. திணறல் எடுத்த மூச்சு சீர்பட்டாலும் பேசும் போதும் நடக்கும் போதும் அவனுக்கு மூச்சு வாங்கத்தான் செய்தது. எளிதாக எதையும் செய்ய முடியாமல் திண்டாடி தத்தளித்துப் போனான். மருத்துவமனையில் இவனிடம் யாரும் எதுவும் கேட்கவில்லை. நேரம் தவறாமல் மருத்துவர் வந்து பரிசோதித்து விட்டுச் செல்ல, செவிலி வந்து மருந்துகளை கொடுத்து கடமையைச் செய்தாள். இவனுக்கு வேண்டிய உணவையும் உடையினையும் ஹாஸ்பிடல் வார்டுபாய் கொண்டு வந்து கொடுக்க, இவனது தேவைகள் எல்லாம் பூர்த்தியடைந்து விடுகின்றன. எந்நேரமும் ஆக்சிஜன் மாஸ்கை அணிய வேண்டியிருந்தது. இன்னும் சிறிது நாளுக்கு இப்படித்தான் நடமாட வேண்டுமென மருத்துவர் சொல்லி விட்டார். ராகவனின் அவஸ்தையின் அளவு இன்னதென்று இல்லாமல் ஏறிக் கொண்டே போனது. ‘அப்பப்பா இத்தனை பாடா? திடகாத்திரமான ஆண் எனக்கே இத்தனை வேதனை என்றால், மென்மையான உடலமைப்பும்