நினைக்காத நேரமேது - 48

  • 3k
  • 1.2k

நினைவு-48 “உங்களைத் தான் மலை போல நம்பி வந்திருக்கேன் ராகவன். முடியாதுன்னு மட்டும் தட்டி கழிச்சுடாதீங்க... ப்ளீஸ்!” எதிரில் அமர்ந்திருந்தவன் பாவமாய் கூற கர்வமாய் சிரித்தான் ராகவன். “கொஞ்சம் விட்டா இந்த விஷயத்துக்கு என்னை தவிர வேற ஆளே இல்லன்னு சொல்லிடுவீங்க போலிருக்கு. இதுக்கெல்லாம் ஸ்பெசலிஸ்ட்னு என்னை முத்திரை குத்திடாதீங்க ப்ரோ!” என்று சிலாகிப்புடன் சிரித்தபடி ராகவன் கூறினான். “வொய் நாட் ப்ரோ? எங்கே எப்படின்னு எந்த ஆதாரமும் இல்லாம ஒரு பெரிய கம்பெனியோட அஸ்திவாரத்தையே பள்ளத்துல தள்ளி இருக்கீங்களே... அது போதாதா, உங்க திறமையை சொல்ல... அதை நம்பித்தானே நானும் உங்களைத் தேடி வந்தேன்” என்று ஐஸ் மழையில் ராகவனை நனைய வைக்க, மகுடிக்கு மயங்கிய பாம்பாக அவனும் தலையாட்டத் தொடங்கினான். “நம்ம வேலை அப்படி கேசவ்... எல்லாத்துலயும் கிளியர் கட்டா இருக்கும். எங்கேயும் குழப்படி இருக்காது” என்று பெருமை பீற்றிக் கொண்டான் ராகவன். “இதுதான் சார் கம்பெனி பேர்...