நினைக்காத நேரமேது - 46

  • 3.1k
  • 1.3k

நினைவு-46 தாத்தாவின் கேள்வி சத்யானந்தனை திகைக்க வைத்தது. ‘தொழிலை அப்படியே விட்டு விடுவான்’ எனும் விதமாக அவர் பேசியதில் சட்டென்று ஆத்திரம் கொண்டான். “ஏன்? என்னைப் பார்த்தா தொழிலை அம்போன்னு விடுறவனாட்டம் தெரியுதா?” என்று தாத்தாவிடம் வெகுண்டு கேட்க, “டேய் சத்யா!” “என்ன கண்ணா இது?” மங்கையர்க்கரசியும் திவ்யாவும் சேர்ந்து அவனை அடக்கினர். “அந்த துரோகிய எங்கிருந்தாலும் வாழ்கன்னு வாழ்த்திட்டு சும்மா விட்றனுமா?” குரலை உயர்த்தியபடியே மீண்டும் பேச ஆரம்பிக்க, அமைதியாக எழுந்தார் தேவானந்தன். “தொழில்ல ஜெயிக்கிறவனுக்கு ஆத்திரம் தான் முதல் எதிரி அதை அடக்கிட்டா எந்த மலையையும் புரட்டிப் போட்றலாம். அவன் எப்படி உள்ளேயே இருந்து காரியத்தை சாதிச்சானோ அதே வழியில போயி மெதுவா தான் அவனை முடிக்கணும். அதுக்கும் முன்னாடி நஷ்டத்தை தாண்டி நாம திடமா எழுந்து நிக்க என்ன செய்யணுமோ அதுல கவனம் செலுத்தணும்.” என்றவர் தனது அறைக்கு திரும்பிச் சென்றார். “அடுத்து என்ன செய்யறது, ஏது