இரவுக்கு ஆயிரம் கைகள் - 15

  • 2.8k
  • 1.1k

ராம் தீபக்கை அழைத்துக்கொண்டு பெங்களூரு புறப்பட்டான்.அவளுக்கு ஒன்றும் ஆகியிருக்க கூடாது . அதிதிக்கு அவளை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள் .முகவரியை கேட்டு வாங்கியிருந்தான் தீபக். மலர் ஹாஸ்பிடலில் ICU வில் இருப்பதாக சொல்லியிருந்தாள். இவர்கள்போய் சேர்ந்தவுடன் விசாரித்ததில் வேலை செய்யும் அக்காதான் முதலில் பார்த்ததாகவும் பிறகு போலீஸ் வந்து கதவை உடைத்து மீட்டதாகவும் அதிதி இப்போது தீப்தியுடைய friend கயல்விழி வீட்டில் இருப்பதாகவும் சொன்னார்கள் . டாக்டர்களிடம் விசாரித்தான் . அவங்க இன்னும் critical கண்டிஷன்லதான் இருக்காங்க 12 ஹௌர்ஸ் கழிச்சுத்தான் சொல்ல முடியும் . வேலைக்கார அக்கா இந்தாங்க சாவி தீப்தி உங்களை பத்தி சொல்லி இருக்கு ஏதாவது ஆச்சுன்னா அந்த கேஷ் கவுண்டர் பொண்ணுக்கும் தகவல் குடுக்க சொல்லி இருந்தாங்க . நான் வந்து ரொம்ப நேரம் ஆச்சு வீட்டுல குழந்தைங்க தனியா இருப்பாங்க என்று விரைந்தாள் . பெண் போலீஸ் ஒருத்தர் இரவு காவலுக்கு இருந்தார்.