இரவுக்கு ஆயிரம் கைகள் - 10

  • 3k
  • 1.1k

விடியோவை முதலில் பிரதி எடுத்தான் . இந்த வீடியோ பல பேரை கதிகலங்க செய்யும் அதே அளவு நமக்கும் ஆபத்து என்பதால் ராகவிடம் கூட சொல்லாமல் மறைத்தான் . அப்பு துணிச்சலாக கடைசி வரை போராடி இருக்கிறான் .அதை நாம் ஒன்றுமில்லாமல் செய்து விடக்கூடாது என நினைத்தான் . விடியோவை யாருக்கும் தெரியாமல் எப்படி கோர்ட் இல் ப்ரொடியூஸ் செய்வது என பலவாறாக சிந்தித்தான் . தீபுவிடம் சொல்லலாமா வேண்டாம் .டெல்லிக்கு போய் கொடுத்தால் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் . தெரிந்த நண்பர் இருந்தார் அவருக்கு போன் செய்தான் . அசோக்குக்கு நீ இன்வோல்வ் ஆயிருக்கேன்னு தெரிஞ்சாலே உன்னை கொன்னுடுவாம்பா . இந்த நேரத்தில் தீபு இருந்தால் உதவியாய் இருக்கும் .தீபு ரெண்டாம் நாளே வந்துவிட்டாள்.அவளுக்கு சூழ்நிலையை விளக்கினான் .நாம அனுப்ப வேண்டாம் அவங்களே கண்டுபிடிக்கிற மாதிரி செஞ்சா ?அப்படி செய்ய முடியுமா தீபு ? அவங்களுக்கு மொட்டை கடிதம் ஒன்னு போடுவோம்