நினைக்காத நேரமேது - 40

  • 2k
  • 903

நினைவு-40 காத்திருந்தேன் காத்திருந்தேன் காலடி ஓசைகள் கேக்கும் வரை பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன் பார்வைகள் போய் வரும் தூரம் வரை நீங்காமல் உன்னை நான் எண்ணி வாழ்ந்தேன் நினைவில் பாதி கனவில் பாதி நாள்தோறும் இதே நிலை வெளியில் சொல்ல முடியாதென்றும் நான் கூட அதே நிலை பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன் பார்வைகள் போய் வரும் தூரம் வரை... காரின் சத்தமும் அதைத் தொடர்ந்து சில கணங்களில் நுழைவு வாயிலில் கேட் திறக்கும் சத்தமும் திவ்யாவிற்கு நன்றாகக் கேட்டது. வருவது யாரென்றும் அவளின் உள்ளம் உணர்த்தியது. பவளமல்லித் திட்டில் அமர்ந்திருந்தவளின் கைவிரல்கள் ஒன்றையொன்று இறுக்கமாகப் பிணைத்துக் கொண்டன. கால்கள் தரையோடு அழுத்திக் கொண்டன. மயங்காதே என்றது மனம். எனினும் இரக்கமற்ற இதயம் அவனுக்காக வேகமாகத் துடிக்க, மானங்கெட்ட மனமோ மயங்க முற்பட்டது. கண்கள் அவனைக் காண துடித்துக் கொண்டன. நெருங்கி வரும் காலடியோசை, இவளின் இதய ஓசையை மத்தளமாய் மாற்றி இசைக்க, கண்களில் குளம்