நினைக்காத நேரமேது - 36

  • 1.2k
  • 270

நினைவு-36 அடுத்து என்ன செய்வதென்று அந்த குடவுனில் பதட்டத்துடன் திவ்யா யோசித்து கொண்டிருந்த சற்று நேரத்தில் கதவில் தட்டும் சப்தம் கேட்டது. ‘சரி... நிலைமையை யூகித்த்ஹு வெளியே இருந்து திறந்து விடுவார்கள், இனி பயமில்லை’ என்று நினைத்தாள். ஆனாலும் அது பொய்யாகிப் போயிற்று! நேரம் கடந்து கொண்டு இருந்ததே தவிர கதவு திறக்கப்படவில்லை. மசாலா அரைக்கும் அரவை மெஷினும் அங்குதான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரணத்தால் சற்று நேரத்திற்கெல்லாம் மசாலாக்களின் நெடி துணியையும் மீறி நாசியைத் தாக்கியது. தும்மலும் இருமலும் நீயா நானா என்று போட்டி போட்டுக்கொண்டு அவளைத் தாக்கி, சற்று நேரத்தில் திவ்யாவின் நுரையீரலுக்கு மூச்சுத்திணறலை அறிமுகப்படுத்தியது.  *********************** "நந்தினி! திவ்யாவுக்கு கால் பண்ணுங்க! உள்ளே என்ன நிலமையில இருக்கானு கேக்கலாம்?" சத்யா தனது பதட்டத்தை வெளிக்காட்டாமல் நந்தினிக்குக் கட்டளையிட, அவளும் பதட்டமாக தனது கைபேசியில் திவ்யாவின் நம்பரைத் தேட, "ம்ப்ச்... நம்பர் சொல்லுங்க... நான் கால் பண்றேன்" எனக் கேட்டான்.