நினைக்காத நேரமேது - 35

  • 1.2k
  • 519

நினைவு-35 சத்யானந்தனின் மனதிற்குள் குழப்ப வெள்ளோட்டம் சுனாமியாய் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. என்ன செய்தும் அதன் வேகம் தணிந்த பாடில்லை. ஆயிரமாயிரம் கேள்விகளுடன் அங்கிருந்த அனைவரையும் பார்த்திருந்தான். அப்ப... நான் ஆக்சிடென்ட்ல கோமாவுக்குப் போகல? ... கிட்டத்தட்ட ஒன்றரை மாசத்துக்கு மேல அம்னீசியாவால எல்லாத்தையும் நான் மறந்துருக்கேன்? .... இவங்க கூடத்தான்... அதுவும் இந்த வீட்ல தான் நான் இருந்திருக்கேன்! .... அப்ப தான் இவளை லவ் பண்ணி கல்யாணம் வரைக்கும் போயிருக்கேன்! ... இப்படி எல்லோரும் அமைதியாவே இருந்தா என்ன அர்த்தம்? தலையை அழுத்திக் கொண்டே தனது குழப்பத்திற்கெல்லாம் விடை தேடுபவனாக கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தான். யாருக்கும் பதில் சொல்லும் தைரியம் இல்லை. அமைதி விடுமுறை கேட்கப் பயந்து அன்றையதினம் ஓவர் டைம் பார்த்தது அங்கு. இத்தனை நாட்களாகத் தன்னைச் சுழற்றிய சூறாவளியின் திசை அறிந்து, சத்தியப் புயல் மையம் ‌கொண்டிருந்தது திவ்யாவின் வீட்டில்! சத்யாவின் தாத்தா தேவானந்தன் உட்பட அனைவரும்