நினைக்காத நேரமேது - 33

  • 3k
  • 1.4k

நினைவு-33 மங்கையர்க்கரசியின் பேச்சில் நியாயம் தென்பட்டாலும் தங்கள் வீட்டுப் பெண்ணிற்காக மட்டுமே யோசிக்கும் நிலையில் இருந்தார் சண்முகம். ''நீங்க பயப்பட இது ஒன்னும் சின்னப் பிள்ளைக விளையாட்டு இல்லம்மா... ரெண்டு பேரோட வாழ்க்கை. நாங்க அப்படியே விட முடியாது. அன்னைக்கும் நீங்க சொன்னீங்களேனு தான் அமைதியா போனோம். இன்னைக்கு நீங்க வரலைன்னா நாங்க அங்க வந்திருப்போம்." என்று திட்டமாக கூறிமுடித்தார். இப்படியே எத்தனை நாட்களுக்கு விடமுடியும்? நேற்றைய திவ்யாவின் நிலை பார்த்து இன்று எப்படியும் மங்கையர்க்கரசியிடம் போய் பேச வேண்டும் என லட்சுமி கணவரிடம் கூறியிருந்தார். "எனக்கும் சீக்கிரம் சத்யாகிட்ட இதைப் பத்தி பேசிடணும். அவனோட தாத்தா தீவிரமா பொண்ணுப் பாக்க ஆரம்பிச்சுட்டாரு! ராமநாதன் சாரோட பேத்திய சத்யாவுக்கு பேசத் தயாரா இருக்காங்க... நேத்து அதுக்கு தான் ஜாதகம் பாத்தாங்க. அதுல தான் நேரம் சரியில்லை, கொஞ்சநாள் போகட்டும்னு சொல்லி இருக்காங்க!" என்றார் மங்கையர்க்கரசி. இதைக் கேட்டு திவ்யாவிற்கு தான் அழுவதா