நினைக்காத நேரமேது - 32

  • 1k
  • 342

நினைவு-32 காலை ஜாகிங் முடித்துவிட்டு வியர்க்க விறுவிறுக்க வீடு வந்தான் சத்யானந்தன். தன் பேரனின் மீது பார்வையை ஓட்டியவாறே அவனது தாத்தா அவர்கள் வீட்டுத் தோட்டத்திலேயே தனது நடைப் பயிற்சியை செய்து கொண்டிருந்தார். இதமான இளங்காலையில், சூரியனின் இளங்கதிரின் செவ்வொளி பட்டு, முறுக்கேறிய புஜங்கள், வெண்கலச் சிலை என மின்ன, இடுப்பில் வலக்கை ஊன்றி, நெற்றி வியர்வையை இடக்கை ஆட்காட்டி‌ விரல் கொண்டு துடைத்து சுண்டிய பேரனின் தோரணையைப் பார்த்தவர், "அழகன்டா!" என்று சிலாகித்தார் பெரியவர். "தாத்தா! என்னைய சைட் அடிச்சது போதும்!" எனக்கூறி சிரித்தவன், "நீங்க எத்தனை எட்டு போட்டாலும் எவனும் லைசென்ஸ் தர மாட்டான்." என எட்டுவடிவில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தவரை பேரனும் கேலி பேசினான். "டிக்கெட் வாங்க வேண்டிய வயசுல லைசென்ஸ் வாங்கி நான் என்னடா பண்ணப் போறேன்? நான் லைசென்ஸ் வாங்குறது இருக்கட்டும். நீ எப்ப ராமநாதன் பேத்தியப் பாக்கப் போற?"  பேரன் மனது மாறுவதற்குள் அடுத்தகட்ட வேலையை