நினைக்காத நேரமேது - 29

  • 2.7k
  • 1.2k

நினைவு-29 இப்பொழுதெல்லாம்‌ மகனை சற்று உன்னிப்பாய் கவனிக்கிறார் மங்கையர்க்கரசி. அவருக்கு தான் தெரியுமே... திவ்யா, ராமநாதன் ஆஃபிஸில் தான் வேலை பார்க்கிறாள் என்று! அவளை சந்தித்த பின் மகனின் மனநிலை என்னவென்று கூர்ந்து கவனிக்கிறார்.  மனதை அலைபாய விடாமல் இருக்க எப்பொழுதும் ஏதாவது ஒரு வேலை இருப்பது போல் ஏற்பாடு செய்து கொண்டான் சத்யானந்தன். ஆனாலும் இரவு என்று ஒன்று வருமே! குளிர்நிலவும், வாடைக்காற்றும் தன்னியல்பு மாறி எதிர்மறையாக வேலை செய்து நெடுநல்வாடையாகிப் போகும் என்றா நினைத்தான்! விஷ்வாவிடம் இது பற்றி பேசலாம் என்றால், அவன் மனசாட்சியை விட கேவலமாகத் திட்டுவானே என்று எண்ணிக் கொண்டான். அடக்க நினைப்பது தான் ஆணவம் கொண்டு ஆடும். எனவே அதை கடக்க நினைத்தான் சத்யா. அவளை நினைக்கக் கூடாதென்று எண்ணியே எந்நேரமும் நினைத்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை அறிந்தான். இனிமேல் இங்கு வரக்கூடாது என்றவனது, வைராக்கியம் பிரசவ வைராக்கியமாக மாறி அடுத்த வாரத்திலேயே அவனை