நினைக்காத நேரமேது - 28

  • 2.2k
  • 893

நினைவு-28 மங்கையர்க்கரசி கெஞ்சலான குரலில் பேச ஆரம்பித்தார். "கொஞ்சம் பொறுமையா சொல்றதைக் கேளுங்கண்ணா! திவ்யாவைப் பத்தி சொன்னா அவளோட பெத்தவங்களைப் பத்தியும் சொல்ல வேண்டிவரும். ஏற்கனவே தன்னால தான் ஆக்சிடன்ட் ஆச்சுனு நினைச்சுட்டிருக்கான். என்ன நடந்ததுன்னு நமக்குத் தெரியலை. அவங்க இப்ப உயிரோடவே இல்லைனு தெரிஞ்சா, அந்த ஸ்ட்ரெசும் சேர்ந்துக்கும். தன்னால தான் ரெண்டு உயிர் போயிருக்குனு தெரிஞ்சா... மேலும் மன அழுத்தம் அதிகமாகும். அதுக்கும் மேல காதல், கல்யாணம் எல்லாத்தையும் ஞாபகப்படுத்தி அவனை ரொம்ப அழுத்தத்துக்கு உள்ளாக்க வேண்டாம்னு நினைக்கிறேன்." என்றவர், திவ்யாவிடம், "எனக்கு என் பையன் இப்படியே வேணும்மா... சில விஷயங்களை காலத்தின் முடிவுக்கு விட்டுருவோம். அவசரப்பட்டு முடிவெடுத்து, அதிகமா குழம்பிட்டான்னா, யாருக்கும் இல்லாம ஆகிருவானோனு பயமாயிருக்கும்மா!" என்று கரகரத்தார். அவருக்கு எங்கே தன்மகன் மீண்டும் அம்னீசியாவிற்கு சென்று விடுவானோ என்கிற பயத்தோடு, ஞாபகங்களை மீட்டெடுப்பதற்காக அதிகமாக யோசித்து வேறு மாதிரியாக குழம்பி விடுவானோ என்ற பயமும் சேர்ந்து