நினைக்காத நேரமேது - 27

  • 2.2k
  • 906

நினைவு-27 மகனது திடீர் திருமணத்தை அறிந்து மங்கையர்க்கரசி முதலில் அதிர்ந்தாலும், அவனது விருப்பமே முக்கியமென்று சமாதானம் ஆகிவிட்டார். அவரைப் பொறுத்தவரை மகன் கிடைத்ததே போதும் என்றிருந்த நிலையில் அவனது ஆசையும், செயலும் பெரிதாகத் தெரியவில்லை. மறுநாள் அறுவை சிகிச்சைக்கான முன்னேற்பாடாக அனைத்து டெஸ்ட்டுகளும் எடுக்கப்பட்டு, அதிகாலை அறுவை சிகிச்சை செய்வதற்கு நேரமும் குறிக்கப்பட்டது. அது விஐபி அறை என்பதால் அனைவருமே அங்கிருந்தனர். சற்று நேரத்தில், பிள்ளைகள் தனியாக இருப்பார்கள் என சண்முகமும், லட்சுமியும், காலை வருவதாகக் கூறி விட்டுக் கிளம்பினர். "சத்யா... நானும் ஆன்ட்டியும் போய் சாப்பிட்டு வர்றோம். வரும்போது சிஸ்டர்க்கு வாங்கிட்டு வந்துர்றோம்." என்று கூற, மங்கையர்க்கரசியும் விஷ்வாவுடன் கிளம்பி விட்டார். சத்யாவுக்கு எளிமையான மருத்துவமனை உணவு வழங்கப்பட்டது. அவன் பெட்டில் அமர்ந்திருக்க, திவ்யா அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். சேலையை மாற்றிவிட்டு சுடிதாரில் வந்திருந்தாள். "தியா..." "ம்ம்ம்…" "இப்பவும் எதுவுமே பேசாம என்னை சோதிக்கிறே!