நினைக்காத நேரமேது - 25

  • 3k
  • 1
  • 1.2k

நினைவு-25 இரவு உணவுவேளை முடிந்து அவரவர் இடத்தில் அடைக்கலமாக, வெகுநேரம் கழித்து அறையை விட்டு வெளியே வந்து பார்த்தான் கண்ணன். அவன் நினைத்தது போலவே திவ்யா பவளமல்லி திட்டில் தனியாக கவலையுடன் அமர்ந்திருந்தாள். கீழே இறங்கி அவளருகில் வந்தான். கண்களில் கண்ணீர் அவள் அழுததைக் கூற, அவனுக்கோ காரணம் புரியவில்லை. "தியா..." வார்த்தைக்கும் வலிக்குமோ என்றிருந்தது அவனின் அழைப்பு. "வாங்க!" என்ற அழைப்பு அவளின் உணர்ச்சியற்ற குரலில். "உன் கண்ணன்கிட்ட எதுக்கு தியா தயங்குறே? நானும் காலையில இருந்து பாக்குறேன். ஏதோ உன் மனசுல கெடந்து உழட்டுது. எதுவாயிருந்தாலும் உன் கண்ணன்கிட்ட சொல்லக்கூடாதா?" ஆற்றாமையாக‌ அவன் ‌கேட்க, நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் கண்கள் மேலும் கண்ணீர் வழிந்தது. "இப்படி எதுவும் சொல்லாம அழுதா எப்படிம்மா? ஒருவேளை நான், என் விருப்பத்தை சொன்னது பிடிக்கலயா?"‌ என்றவாறு அவளருகில் அமர்ந்தான். கண்களில் ஏக்கத்தோடு அவள் பார்க்க, "சொன்னாத் தானே தெரியும். இன்னும் என்னை நீ கண்ணானு