நினைக்காத நேரமேது - 23

  • 3.5k
  • 1.5k

நினைவு-23 கையில் இருந்த சாம்பார் வாளி தெறித்து கீழே விழுந்து சிதறி இருந்தது. கண்ணன் அதிர்ச்சியில் கன்னத்தைப் பிடித்தவாறு எதிரில் நின்றவரைப் பார்க்க, மங்கையர்க்கரசியோ எரிமலைக் குழம்பாய் கொதித்துக் கொண்டிருந்தார். மனதின் படபடப்பு இன்னும் அடங்கவில்லை அவருக்கு... ‘எங்கிருக்கிறானோ… எப்படியிருக்கிறானோ…’ என்று தெரியாமல் இத்தனை நாட்களாக தவித்த தவிப்பு, மகனை நேரில் கண்டவுடன் கோபமும் அழுகையுமாக வெளிப்பட்டது.  காரை விட்டு இறங்கி, உள்ளே நுழைந்தவரின் கண்களில் பட்டது, உணவுக்கூடத்தில் தோளில் சிறு துண்டும், சாதாரண கைலி டிசர்ட்டில், சாம்பார் வாளியுடன் பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்ப, லட்சுமிக்கு உதவிக் கொண்டு இருந்த தன் மகனைத் தான்! துக்க வீட்டிற்கு சென்றவர்கள் இன்று காலையில் தான் வந்தனர். திவ்யாவும் கல்லூரிக்கு செல்லக் கிளம்பி அப்பொழுது தான் வெளியே வந்தாள். அவர்களின் பரபரப்பான தினசரி ஆரம்பமாகி இருந்தது. அந்த நேரத்தில் தான் இந்த களேபரம். "என்னடா சத்யா இது... பிச்சைக்கார வேஷம்?" தாளமுடியாமல் கோபத்துடன் கேட்டார்