நினைக்காத நேரமேது - 22

  • 2.4k
  • 1k

நினைவு-22 தலையில் நெருக்கக் கட்டிய முல்லைப்பூச்சரம், ஆரஞ்சும் இளஞ்சிவப்பும் கலந்த சல்வாரில் அவனது தேவதை பவளமல்லி திட்டில் அமர்ந்திருந்தாள். மாடியில் இருந்தவாறு கைப்பிடிச் சுவரில் குனிந்து முழங்கையை குற்றி ஊன்றியவாறே அவளை ரசித்துக் கொண்டிருந்தான் கண்ணன். கையில் அவன் மாலையில் கொடுத்த வரைபடத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது பெற்றோருடன் அவளும் சேர்ந்து எடுத்த நிழற்படம் பென்சில் ஓவியமாய் அவள் கைகளில், நேர்த்தியாக வரைந்து கொடுத்து இருந்தான். பிள்ளைகள் மாலை பள்ளி விட்டு வந்ததும் தேவியை அழைத்த கண்ணன், "தேவி உனக்கு பூக்கட்ட தெரியுமா?" எனக்கேட்க, "மாலைக்கட்டே கட்ட தெரியும்ண்ணே... யூ டியூப்ல பாத்து கத்துக்கிட்டேன்." என்றாள். "அதை‌ இன்னொரு நாளைக்கு கட்டிக்கலாம். இப்ப, கொடியில் இருக்க முல்லை பூவைப் பறிச்சு தலையில் வைக்கிற மாதிரி சரமா கட்டிக் கொடுடா ம்மா!" என்று கேட்க, "எதுக்குண்ணே? புதுசா பூவெல்லாம் கட்டச் சொல்றீங்க! கடையில பூஜைக்கு வேணுமா? இன்னைக்கி வெள்ளிகிழமை கூட இல்லியே?' என்று கேள்வி