நினைக்காத நேரமேது - 20

  • 2.3k
  • 1.1k

நினைவு-20 காருண்யா பல்நோக்கு மருத்துவமனை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. காத்திருப்போர் வரிசையில் சண்முகம், கண்ணன் மற்றும் திவ்யா பெரும் குழப்பத்துடன் அமர்ந்திருந்தனர். அந்த அறைக்கு வெளியே டாக்டர் நாராயணன் நியூராலஜிஸ்ட் எனும் பெயர்ப்பலகை ஒட்டப்பட்டிருந்தது. ‘அவர் என்ன கூறப் போகிறார்?’ என்ற பதற்றம் சண்முகம் முகத்தை விட, மற்ற இருவர் முகத்திலும் அதிகமாகத் தெரிந்தது.  ஏற்கனவே அவரை சந்தித்து, அவரது பரிந்துரையின் பேரில், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ரிப்போர்ட்டோடு, அவரை சந்திக்க இப்பொழுது காத்திருக்கின்றனர். "கண்ணன்!" மணியடித்து பெயர் அழைத்தவுடன் மூவரும் உள்ளே சென்றனர். டாக்டர் நாராயணன்... அறுபதுகளைக் கடந்த படிப்பும் அனுபவமும் கற்றுத் தந்த, நிதானம் நிறைந்த முகம். அறைக்குள் வந்தவர்களை ஆழ்ந்து பார்த்தார். மூவருக்கும் இருக்கையைக் காட்டியவர், ரிப்போர்ட்டை வாங்கிப் பார்க்க ஆரம்பித்தார். சில நிமிட பார்வையிடலுக்கு பிறகு நிமிர்ந்தவர்,  "இன்னும் கண்ணனோட குடும்ப விபரம் எதுவும் தெரியலையா சண்முகம்?" அவனின் முந்தைய விபத்து விபரம் தெரிந்தவராகக் கேட்க, "இன்னும்‌ எதுவும்