நினைக்காத நேரமேது - 18

  • 912
  • 273

நினைவு-18 மறுபடியும் திவ்யா சோக மோடுக்குப் போக அதைக் காணச் சகிக்காதவனாய், கேலி பேச ஆரம்பித்தான் சத்யானந்தன். "ஏங்க! காஃபி கொடுத்து டெஸ்ட் பண்ணுனீங்க… வேற எதுவுமில்லையா என்னை எலியாக்க?" என்றவனிடம், "சாரி கண்ணன்! ஒரு நாளைக்கு ஒரு டெஸ்ட்டுதான். எலி தாங்க வேண்டாமா? அதுக்கு ஏதாவது ஆகிட்டா இன்னொன்றுக்கு நான் எங்கே போறது? வான்டடா இப்படி வந்து சிக்குற எலி கிடைக்கறது ரொம்ப ரேர் கண்ணன்." அவள் கூறியதைக் கேட்டு அவன் சிரிக்க, அவளும் சிரித்தாள், வெகு நாட்கள் கழித்து மனம் விட்டுப் பேசியதில். எடுத்து வந்த பொருட்களை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்த பாப்பாத்தியும், திவ்யாவின் சிரிப்பைக் கேட்டு, 'மறுபடியும் இந்தப்புள்ள பழைய மாதிரி கலகலப்பாக மாறணும்.' என்று எண்ணிக் கொண்டார். காஃபியைக் குடித்துவிட்டு கிளம்பியவன், பாப்பாத்தியை அழைத்து, "தேவையில்லாம வெளிய வராதிங்க ஆத்தா! கேட்டை நல்லா பூட்டிக்கோங்க! அவங்க சொந்தக்காரங்க யாராவது வந்துருவாங்க. திவ்யாவை வேற நல்ல ட்ரெஸ்ஸா