நினைக்காத நேரமேது - 16

  • 3.2k
  • 1.6k

நினைவு-16 "திவிக்கா சிரிக்காதிங்க. ஒரு அக்காவா இந்த எடத்துல என்ன சொல்லணும்?" தோரணையுடன் சதீஷ் கேட்க, "என்னடா சொல்லணும்?" திவ்யாவும் குறும்புப் பேச்சில் இணைந்து கொள்ள, "சதீஷ் கருப்பா இருந்தாலும் களையா இருக்கான்னு சொல்லணுமா... இல்லையா?'' எதிர்கேள்வி கேட்டு அவளின் வாயடைத்தான் சதீஷ். "எப்படிடா மனசறிஞ்சு பொய் சொல்லுவாங்க? அப்படி சொன்னா நம்ம மனசே நம்மைச் சுடும்னு வள்ளுவர் தாத்தா சொல்லியிருக்காருல...." என்று தேவி நக்கலடிக்க, "ம்ம்... அவரே தான் நன்மைக்காக பொய் சொல்லலாம்னும் சொல்லியிருக்கார்." என்றான். “பாருங்க க்கா... இவன் இஷ்டத்துக்கு ரெண்டு வரி திருக்குறளை எப்படியெல்லாம் யூஸ் பண்ணிக்கிறான்னு!” தேவி கேலி பேசிய நேரத்தில், "அப்படின்னா பொய்யாவாவது நீ அழகன்னு சொல்லச் சொல்றியா?" என்றாள் திவ்யா. "ஒரு பொய்யாவது சொல் அக்கா… அழகன் நான் தானென்று… அந்தப் பொய்யில்… உயிர் வாழ்வேன்," என்று அவன்‌ பாட ஆரம்பிக்க, "டேய், போதும்டா நிப்பாட்டு. வரவர உன் இம்சை தாங்கலை." என்று