நினைக்காத நேரமேது - 13

  • 3.5k
  • 1.8k

நினைவு-13 இரவு நேரமாதலால் அங்கு நடந்த விபத்து அறியப்பட சற்று தாமதமானது. அதற்குள் அவ்வழி சென்ற நம்நாட்டு இரு குடிமகன்கள், கீழே கிடந்தவனை, உயிர் சோதனை செய்வது போல் சென்று, யாரும் அறியா வண்ணம், விபத்திற்கு உள்ளானவனின் செயின், பர்ஸ் முதலியவைகளை கைப்பற்றிக் கொண்டனர். மோதிரம் சற்று இறுக்கமாக இருந்ததால், கழற்றுவதற்குள் கூட்டம் சேர ஆரம்பிக்க, நல்லவர்களாக நூற்றியெட்டுக்கு அழைப்பை விடுத்து விட்டு, சற்றுத் தொலைவில் கிடந்த அவனுடைய பேக்கையும் எடுத்துக் கொண்டு நழுவினர். 'இருட்டறதுக்குள்ள வந்துடறதா சொன்னாங்க... இன்னும் காணோம். வீட்ல புள்ள தனியா பயந்துகிட்டு இருப்பாளே, சீக்கிரம் வரணும்னு எண்ணம் இருக்கா? நம்மகிட்ட மட்டும் இப்படியிரு அப்படியிருனு ஆயிரத்தெட்ட சொல்ல வேண்டியது.' திவ்யாவின் மனம் இன்னதென்று முறையில்லாமல் வெடுவெடுத்துக் கொண்டிருந்தது. பெற்றோர் வரத் தாமதமானதால் வந்த படபடப்போ? இல்லை அவர்களுக்கு நேர்ந்த முடிவை உள்ளுணர்வு உணர்த்தியதோ? ஏதோ ஒன்று அவளை அலைக்கழித்தது ஃபோனில் அழைப்பு மணி ஒழிக்க, அழைப்பை