நினைவு-12 "ம்ம்மாஆஆ... என்னம்மா இது?" வீடே அலறுமாறு கத்திக் கொண்டே இருந்தாள் திவ்யா. "ஏன்டி இப்படிக் கத்துற?" பட்டுப் புடவையின் மடிப்பை நீவியவாறேக் கேட்டுக்கொண்டு சரஸ்வதி வர, "ஏம்மா… வெறும் சாம்பார மட்டும் வச்சுட்டுப் போனா எப்படிம்மா சாப்டறது? பொட்டோட்டோ ஃப்ரை எங்கம்மா?" ஆத்திரத்துடன் கேட்க, "அடத் தீனிப் பண்டாரமே… இதுக்கா இப்படிக் கத்துன? ஏற்கனவே அந்த சைஸ்ல தான இருக்க? இதுல எப்பப்பாரு உருளைக்கிழங்கு ஃப்ரை கேக்குது." என்று கன்னத்தில் இடித்தார். "வெறும் சாம்பார் சோத்த எப்படிம்மா சாப்டறது, தொட்டுக்க ஒன்னுமில்லாம?" "சாப்பிடும் போது அப்பளம் போட்டுக்க… ஃப்ரிட்ஜ்ல தயிர் இருக்கு. ஊறுகா எடுத்துக்க… ஏழு கழுத வயசாகுது இன்னும் வெளிய கிளம்பினா எல்லாம் செஞ்சு வச்சுட்டுப் போக வேண்டியதா இருக்கு." என்று பேச்சோடு பேச்சாக நொடித்துக் கொண்டார் சரஸ்வதி. "அப்பா... இங்க பாருங்கப்பா... குழம்ப மட்டும் வச்சுட்டுப் போறாங்க, கேட்டா நீயே செஞ்சுக்கனு சொல்றாங்கப்பா." என்று கிளம்பித் தயாராகி