நினைக்காத நேரமேது - 11

  • 1.2k
  • 360

நினைவு-11 தன்னவனைப் பார்த்து விட்டால் தனது காதலை வெளிப்படுத்த முடியாமல் இருக்க முடியாதென்று நினைத்து தான் திவ்யாவும் இவ்வளவு நாட்களாக ஒதுங்கி இருந்தது. அதற்கே அவள் பட்டபாடு சொல்லிமாளாது. ஆனால் தன்னவனை நேரில் சந்தித்தப் பிறகு, இனியும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியுமென்று அவளுக்குத் தோன்றவில்லை. சாப்பாட்டைக் கிண்டிக்கொண்டே யோசனையோடு திவ்யா அமைதியாக இருக்க, "ஏன் திவி? இப்படி வாழ்ற வயசுல வெளிநாட்டுல போய் உக்காந்துகிட்டு காச மட்டும் சம்பாரிச்சு என்ன பண்ணப் போறீங்க?" திவ்யாவைப் பற்றி அவள் கூறியதை வைத்துக் கேட்டாள் நந்தினி. 'என்ற வூட்டுக்காரர் வெளிநாட்டுல‌ இல்லைங்கோ, எம்.டி. ரூம்ல தான் உக்காந்திருக்காருங்கோ அம்மணி!' என்று கூறினால் எப்படி‌ இருக்கும் என்று எக்குதப்பாக நினைத்தது திவ்யாவின் மனம். அப்படி நினைத்துப் பார்த்தவளின் முகத்தில் சட்டென்று சிறு புன்னகை முகத்தில் தோன்றவும் செய்தது. அதைப் பார்த்து தோழியின் மேல் கோபம் கொண்டாள் நந்தினி. "நான் என்ன இப்ப காமெடியா பண்ணேன்? காலம்