அதிதி அத்தியாயம் - 7

  • 5.6k
  • 1.8k

எப்ரல் 13,1985 ரோகனும் ரகுவும் இரயிலில் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்துகொண்டிருக்கின்றனர்... இம்முறை ஜன்னல் சீட்டிற்காக இருவரும் அடித்து பிடித்து கொள்ளவில்லை...ஏனென்றால் இருவருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை ஏற்கனவே அங்கு வயதான ஓர் தாத்தா உட்கார்ந்திருந்தார்...தன் ஒன்பது வருடங்கள் பெங்களூர் வாசத்தை முடித்து விட்டு ரகு தன் சொந்த ஊரையும் தன் தந்தையையும் பார்க்க சென்று கொண்டு இருக்கிறான்...இத்தனை வருடங்களில் பெங்களூர் அவனுக்கு அடைக்கலம் மட்டுமே தரவில்லை பல உறவுகளையும் நினைவுகளையும் சேர்த்தே கொடுத்திருக்கிறது...சென்னையில் வீட்டினுள்ளே கூண்டு பறவை போல் வாழ்ந்த ரகுவிற்கு வாழ்க்கை என்பது என்னவென்று வழிக்காட்டி சிறகடித்து பறக்க கற்று தந்தது பெங்களூர்.அங்கிருந்து பிரிய மனமின்றி வேறு வழியுமின்றி மீண்டும் சென்னை நோக்கி சென்று கொண்டிருக்கிறான்.இரயில் புறப்பட தொடங்கிய சில நிமிடங்களிலே ரோகன் உறங்கிவிட்டான்...ரகுவுக்கு ஏனோ உறக்கம் வரவில்லை. அவனது பேச்சுதுணைக்கு ரோகனும் இல்லை அதனால் தன் கண்ணை மூடிக்கொண்டு தன் பெங்களூர் வாழ்க்கையை மனதினுள் நினைத்து பார்க்க