அதிதி அத்தியாயம் - 3

  • 4.6k
  • 2.2k

மோகன் சென்னைக்கு வந்தவுடன் தன் ஆஃபீஸ் வேளைகளில் தன்னை ஈடுபடுத்த ஆரம்பித்தான்...ரகுவும் ஸ்கூலுக்கு செல்ல ஆரம்பித்தான்...மோகன் இப்பொழுதெல்லாம் முன்னர் போல் இரவு பத்து மணி வரை எவ்வளவு வேலையாக இருந்தாலும் இரவு ஏழு மணிக்கே வீட்டிற்கு வந்துவிடுவான்...ரகுவுடன் பொழுது கழிக்க...இப்பொழுதெல்லாம் ரகு மோகனின் மாரில் தான் படுத்து உறங்குவான்...அப்படி உறங்கும் வேளையில் தான் ரகு தன் மனத்தில் நீண்ட நாட்களாக தேக்கிவைத்திருந்த கேள்வியை மோகனிடம் கேட்டான் "நீதான் அம்மாவ கொன்னையா...."ரகுமோகன் அதிர்ச்சியுடன் ரகுவை பார்க்கிறான்."நா ஏன் அம்மாவ கொல்லனும்..."மோகன்"பிறகு ஏன் அம்மா கூட அன்னைக்கு சண்டை போட்டுட்டு இருந்த..."ரகு"சண்டை போடல ரகு பேசிட்டு இருந்தோம்...அம்மாவும் அப்பாவும் எப்பையும் சண்டை போட்டதில்ல...""ஏன் என்ன அன்னைக்கு அம்மா முகத்த பாக்க விடல...""நீ பயந்துடுவனு ரகு...நீ ரொம்ப சின்ன பையன் அதான் உன்ன பாக்க விடல...""அம்மா ஏன் இப்படி நம்ம எல்லாரையும் விட்டு போயிடுச்சு...""அம்மா எங்கையும் போல....நம்ம கூட தான் சாமியா இருக்கு எப்பையும் நம்ம