1.சந்தோஷ் சாரங்கன் வீடு கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது அனைவரது முகமும் மகிழ்ச்சியில் ததும்பி கொண்டுள்ளது.சாரங்கன் பி.எஸ் இம்போர்ட்ஸ் அண்ட் எஸ்போர்ட்ஸின் ஆஸ்தான முதலாளி 1960 யில் அவனது தந்தையால் நிறுவப்பட்ட அந்த நிறுவனம் அவனது தந்தையின் எதிர்பாராத மரணத்தால் இழுத்து மூடும் நிலைக்கு சென்ற பொழுது சாரங்கன் அதை எடுத்து நடத்த ஆரம்பித்தான் இப்பொழுது இந்த நிறுவனத்தின் பெயரை தெரியாத தொழிலதிபர்கள் ஓரிருவர் தான் இருக்க முடியும்.இப்படிப்பட்ட முன்னேற்றத்தால் சாரங்கனுக்கு வீட்டிலும் சரி வெளியிலும் சரி மதிப்பு அதிகம் .சாரங்கன் குடும்பம் சென்னை போன்ற நகரில் யாரும் காண முடியாத (அதனாலே நான் காண விரும்பிய)கூட்டு குடும்பம்.அவனது மனைவி மஹாலக்ஷ்மி பேருக்கு தகுந்தாற் போல குணமுடையவள் அவர்களது ஒரே மகள் மாதங்கிச்செல்வி (மது).சாரங்கனது தம்பி சக்திவேல் அவனது நிறுவனத்திலேயே எக்ஸுகுயுடிவ் மேனேஜர் ஆக வேலை செய்து கொண்டுள்ளான்.அவனது மனைவி கஸ்தூரி.கஸ்தூரி-சக்திவேல் இணைக்கு ஒரே மகள் பூஜா காலேஜ் 2 ஆம் வருடம்