களவாடிய தருணங்கள்

  • 17.1k
  • 5.4k

இலையுதிர் கால இலைகள் மெள்ள தன் இருப்பிடம் விட்டு சென்று கொண்டிருந்தன எங்கு செல்ல போகிறோம் என்று தெரியாமல் சுழன்று கொண்டு இருந்தன அப்போது ஒரு பலத்த காற்று தென்னங்கீற்றை வருடி எடுத்து வந்த தென்றலின் இன்னிசை கூடிய ஓர் இதமான காற்று சட்டென்று அவன் மீது வீச என்ன காரணமென்று புரியவில்லை. அது ஒரு மாலை பொழுது மேற்கே கீழ் வானம் சிவந்து கிடந்தது வீசிய காற்று மேற்கே அவனை திருப்பியது. கீழ் வான சிவப்பிற்க்கு போட்டியாக வெட்கம் சிவக்க அவள் நடந்து வந்தாள். விற்றென்று அந்த சிவப்பில் ஓர் மின்னால் வெட்டியது அவள் கடைக்கண் பார்வையின் வீச்சு அது.மையம் கொண்ட புயலை எதிர்பார்வையிட மின்னல் வந்த நேரமது. சிவந்த வெட்கம் கொஞ்சும் நானம் கொஞ்சம் பார்வையென அவள் நெருங்கி வரும்போதே அவன் உடம்பெல்லாம அனலேறியது ஆயிரம் அரிவைகள் கூடி நின்றபோதிலும் கண் பார்ப்பவன் இன்று இவள் கண்னை பார்க்கமுடியாமல்