மௌட்டியம்

  • 10.1k
  • 3k

லாந்தர் வெளிச்சத்தில் வியர்க்க விருவிருக்க செக்கோடி தெற்காலே இருந்த‌ ஒத்தையடி பாதையில் வெறிக் கொண்டு மட்டும் தேடி கொண்டிருந்தான் தருமன். நெற்றி முகமெல்லாம் வியர்வை உதிர்ந்து கொட்டியது. இரண்டு பக்கமும் கருவேலங்காடு சூழ்ந்திருந்ததால் தேடியது கிடைப்பதில் சிக்கல் இருந்தது. ஆளரவம் இல்லாத நிசப்தமான அந்த சாயங்கால வேளையில் யாரையோ கண்ணில் விளக்கெண்ணெயை விட்டதை போல தேடினான். "என்னணே இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க" அவ்வழியே சைக்கிளில் வந்த ஊர்க்காரன் கேட்டான்."என் மவன தேடிட்டு இருக்கேன் டா" "ஏன் ணே என்னாச்சு" "வீட்டில இருந்த இரண்டு பவுண் சங்கிலிய எடுத்து ஓடிட்டான்டா""என்னணே சொல்ற எதுக்கு அத எடுத்துட்டு ஓடுனான்" "அடேய் அத சொல்லலாம் இப்ப நேரமில்லை அந்த நாய்க்கு என்ன நொரண்டு இருந்த எடுத்துட்டு ஓடுவான் ஓடுகாலி பய" தருமன் ஆத்திரத்துடன் சொன்னான். "ஏய் தருமா உன்ன எங்கலாம் தேடுறது! இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க... நீ என்னத்த வேனா பண்ணிட்டு போ.