மெய்தீண்டா ஸ்பரிசம்

  • 22.3k
  • 4.5k

தாமரைக் குளந்தனில் மலர் கொடிகள் சூழ்ந்து கிடக்க பனிதுளி தாமரை மலர்களை அள்ளி அனைத்த நேரமது. வலப்பக்கம் ஒருகளித்து படுத்த சுகம் வெறுத்து போக இடப்பக்கம் ஒருகளிக்க முன்வந்தாள் வெண்மதி. ஏனோ மல்லாந்து படுத்திட நேரமுமில்லாமல் தலைக்குப்புற படுத்திட காலமும் கனியாமல் தன் கண்களை அலக்கழித்து கொண்டிருந்தான் வளன். எதை எதையோ யோசிக்க தூக்கம் அவன் கண்ணனை கவ்வாமலே கிடந்தது அவ்வப்போது மனைவியின் முகத்தையும் அவள் இடுப்பின் வளைவையும் கண்டு மனம் வெகுண்டான். அவளோ வண்ண கனவுகளால் மெய்மறக்க தன் சப்தமிடும் வளைவிகளை கொண்டு தன் அடி வயிற்றை மெல்ல அனைத்தாள். அவள் முழுக இன்னும் ஈர்இரண்டு திங்கள் ஆகும்படியால் அவள் முகம் சற்றும் குறையாத அவாவை அள்ளி பூசியிருந்தது.யாருக்கும் எளிதில் இந்த வரத்தை அவன் வழங்காத போதிலும் இந்த வரத்தை பெற்றமையால் வளனின் உள்ளம் பெரிதும் இன்பம் கொள்ளாது இருந்தது. அவன் மனம் சஞ்சலத்தில் மூழ்கி தவித்தது. ஆசை காதல்